பிஜீங்:-சீனாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவருடைய குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தது.
வழக்கமான பெண்களை விட அவருக்கு அதிகளவு தாய்ப்பால் சுரந்ததால், அதை வீணாக்க விரும்பாத அந்த பெண், தாய்ப்பால் மூலம் சோப்பு தயாரித்தார்.தான் தயாரித்த சோப்பை விற்பனை செய்ய அவர் ஆன்லைனை உபயோகித்தார். சுத்தமான தாய்ப்பாலில் செய்த சோப்பு, தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் என அவர் செய்த விளம்பரத்திற்கு நல்ல பயன் கிடைத்தது.
அமேசான் இணையதளத்தில் அவர் செய்த விளம்பரத்தால் அதிக அளவிலான ஆர்டர்கள் அவருக்கு கிடைத்துள்ளது. அவர் தயாரிக்கும் சோப்பு முயல்,மீன், போன்ற அழகிய வடிவங்களில் இருந்ததால் சீனர்கள் இந்த சோப்பை வாங்குவதில் போட்டி போடுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி