செய்திகள்,திரையுலகம் தனுஷுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது!…

தனுஷுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது!…

தனுஷுக்கு சிறந்த அறிமுக நாயகன் விருது!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவில் உள்ள தாம்பா பே நகரில் 15வது சர்வதேச திரைப்பட விழா நடிந்தது. விழாவின் நிறைவு நாளில் சிறந்த நடிகர், நடிகையருக்கு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்த இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், துணை நடிகைக்கான விருது ‘பாஹ் மில்கா பாஹ்’ என்ற படத்தில் நடித்ததற்காக திவ்யா தத்துவுக்கும் கிடைத்தது. டி டே படத்தில் வில்லனாக நடித்த ரிஷிகபூர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

சிறந்த புதுமுக நடிகருக்கான விருது தனுஷிற்கு கிடைத்துள்ளது. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்த ‘ராஞ்சனா’ படத்திற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி