சென்னை:-நடிகை சமந்தா தனது 27வது பிறந்தநாளை ‘கத்தி’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு விஜய் மற்றும் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த படம் தவிர லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்திலும் சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
விக்ரம், கார்த்தி ஜோடியாக நடிக்கவும் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., பவன் கல்யான், சித்தார்த், நாக சைதன்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.‘கத்தி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விஜய், சமந்தா இருவரும் லண்டனுக்கு பயணப்பட இருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி