எனினும், விமான ஓட்டியின் திறமையால் எந்த விதமான சேதமும் இன்றி விமானம் உடனடியாக பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.எரிபொருள் தீப்பிடித்து எஞ்சின் ஒன்று எரியத் தொடங்கியதும் பயணிகளிடத்தில் பதற்றம் தோன்றியது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருக்க விமானி திறமையாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே திரும்பவும் தரையிறக்கினார் என்று இந்த விமானத்தில் பயணம் செய்த ஜேசன் கிரிமெட் என்பவர் தெரிவித்தார்.
என்ஜினில் பற்றிய தீ விமானியால் அணைக்கப்பட்டு பரவாமல் தடுக்கப்பட்டது என்றும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்பு சேவை அந்த விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தது என்றும் விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி