2005ம் ஆண்டு முதல் தொழில்முறை வீரராக நாசியானோல் அணிக்காக விளையாட ஆரம்பித்த இவர் 2006ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் உள்ள எஃப்சி க்ரோனிங்கேன் அணிக்காகவும், 2007 முதல் 2011ம் ஆண்டு வரை மற்றொரு நெதர்லாந்து கால்பந்தாட்ட அணியான அயாக்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.இதையடுத்து, 2011ம் ஆண்டு லிவர்பூல் கால்பந்து அணி 22.8 மில்லியன் பவுண்ட் தொகைக்கு இவரை வாங்கியது. எனினும்,இந்நிலையில், 1986-87ஆம் ஆண்டில் இயான் ரஷ்க்கு பிறகு ஒரு சீசனில் 30 லீக் கோல்கள் என்ற இவரின் சாதனை குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூன் மாதம் பிரேசிலில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தனது அணியை வழிநடத்திச் செல்லப்போவதும் இவரே.விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது பற்றி கருத்து தெரிவித்த லூயிஸ் கூறுகையில்,”பிரிமீயர் லீக் என்பது முழுக்க முழுக்க சிறந்த வீரர்களை கொண்டது. இதுபோன்ற அனுபவமிக்க பிளேயர்கள் ஆடுகளத்தில் என்னுடைய ஆட்டங்களை அங்கீகரித்தது மிகப்பெரிய கௌரவமாக உள்ளது.” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி