இதில் ஒரு விமானம் நொறுங்கி கடலுக்குள் விழுந்தது. இன்னொரு விமானம் பத்திரமாக தரையிறங்கியது.அதில் விமானி மட்டுமே பயணம் செய்திருந்தார். அவர் பெரிய காயமின்றி உயிர் தப்பினார். கடலில் விமானம் விழுந்தது குறித்து தகவல் அறிந்ததும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளும், கடலோர காவல் படையினரின் துணையுடன் கடலுக்குள் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலோர காவல் படையின் 4 படகுகளும், ஒரு ஹெலிகாப்டரும் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து, விமானநிலைய நிர்வாக செய்தி தொடர்பாளர் இயான் கிரிகோர் கூறுகையில், ‘கடலில் விழுந்த குட்டி விமானத்திலும் ஒரு விமானி மட்டுமே பயணித்திருக்கலாம் என தெரிகிறது. எனினும், மீட்பு பணிக்கு பின்பே எதுவும் கூற முடியும்’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி