8 அமெரிக்க போர்விமானங்கள்,11 கப்பல்கள், தற்போது தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன. கடலுக்கு அடியில் தேடும் பகுதி இறுதி கட்ட்த்தை நெருங்கி உள்ளது விரைவில் முடிவடையும் என தெரிகிறது.இன்று புளுபின்21 தேடும் பணியின் 16-வது மிஷன் தொடங்கியது.இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அபோட் கூறியதாவது:- புளுபின் 21 தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தபட்டு வருகிறது. தேடுதல் வேட்டையில் வேறு வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தேடுதல் வேட்டையை வணிக நிறுவனங்களிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு, மலேசிய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.மற்ற நாடுகளை சேர்க்காமல் ஆஸ்திரேலியா மட்டும் இந்த தேடுதல் வேட்டைக்கு 60 மில்லியன் டாலர்களை செலவழித்து உள்ளது. விமானத்தின் பாகங்கள் கடலின் மேற்பரப்பில் கிடைக்கும் சாத்தியகூறுகள் இல்லை. அடுத்து புதிய கட்டம் தொடங்கப்படுகிறது.இது கடலின் பெரும் பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறும் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி