சென்னை:-லிங்குசாமி இயக்கம் ‘அஞ்சான்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது.இதற்கடுத்து சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம் பேசினார்களாம்.
ஆனால் ஸ்ருதி இப்போது ஹரி இயக்கும் ‘பூஜை’ படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு நடிகையைத் தேடினார்கள். இப்போது நயன்தாராவை சூர்யாவிற்கு ஜோடி சேர்க்கப் போகிறார்களாம்.இதற்குமுன் ‘கஜினி’ மற்றும் ‘ஆதவன்’ படங்களில் சூர்யாவும், நயன்தாராவும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி