சென்னை:-‘அழகு குட்டி செல்லம்‘ பட இயக்குனர் சார்லஸ் கூறியதாவது: குழந்தை இல்லாத தம்பதி, அதிக பெண் குழந்தை பெற்றவர்கள், விவாகரத்து செய்யும் தம்பதிகளின் குழந்தைகள் எதிர்காலம் போன்ற சம்பவங்களை உள்ளடக்கி ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நடிக்க ஹீரோ, ஹீரோயின்களை தேடியதைவிட பிறந்த குழந்தைகளை தேடுவதற்குத்தான் அதிக நேரம் தேவைப்பட்டது. 3 கைக்குழந்தைகள் பிரதானமாக நடிக்கின்றன. அவ்வப்போது இடைவெளி விட்டு ஷூட்டிங் நடத்தியதால் அது முடிய ஒரு வருட காலம் ஆனது. அதற்குள் குழந்தைகள் வளர்ந்துவிடும்.
அவர்களை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. எனவே அவ்வப்போது பிறந்த குழந்தைகளை தேடி ஏற்கனவே நடித்த குழந்தைகளுக்கு டூப்பாக நடிக்க வைத்தோம். இதில் அகில், கருணாஸ், தம்பி ராமையா, ரித்விகா, யாழினி நடித்துள்ளனர். தயாரிப்பு ஆண்டனி. இசை வேத் சங்கர் சுகவனம். ஒளிப்பதிவு விஜய் ஆர்ம்ஸ்டிராங்.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி