செய்திகள்,திரையுலகம் மீண்டும் வெளியாகும் அஜித் நடித்த ‘அமர்க்களம்’!…

மீண்டும் வெளியாகும் அஜித் நடித்த ‘அமர்க்களம்’!…

மீண்டும் வெளியாகும் அஜித் நடித்த ‘அமர்க்களம்’!… post thumbnail image
சென்னை:-கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தின் 25வது படமாக வெளிவந்த படம் ‘அமர்க்களம்‘. சரணின் இயக்கத்திலும், பரத்வாஜின் இசையமைப்பிலும் வெளிவந்த இந்தப் படம் அஜீத்திற்கும் திரையுலகில் ஒரு திருப்புமுனையைத் தந்தது.

இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக வந்த ஷாலினியை நிஜ வாழ்விலும் பின்னர் அஜித் வாழ்க்கைத் துணையாக்கிக்கொண்டார்.அப்போது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படம் இப்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட உள்ளது என்று திரைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புதிய காப்பி அவரது ரசிகர்களுக்கு சிறந்த கோடைக் கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி