முதலில் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்தது, அதன் பிறகு அந்த சிக்னலும் கிடைக்கவில்லை.இதனையடுத்து கருப்புப் பெட்டியை தேட ஆளில்லா நீர்முழ்கி கப்பல் கடலுக்கடியே விடப்பட்டது.நீர்மூழ்கி கப்பல் கடலின் தரை பரப்பில் 16 மணிநேரம் விமானத்தை தேடுவதாக இருந்தது.ஆனால் கடலின் ஆழம் 15 ஆயிரம் அடிக்கும் மேலாக இருந்ததால் கப்பலால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.எனவே சுமார் 6 மணிநேரம் மட்டும் தேடிவிட்டு கடலில் மேற்பரப்புக்கு வந்துள்ளது, அந்நேரத்தில் எவ்வித பாகங்களும் கிடைக்கப்பெறவில்லை.
நீர்மூழ்கி கப்பல் மீண்டும் மாயமான விமானத்தை தேட கடலின் தரை பரப்புக்கு செல்ல உள்ளது, அங்கு வானிலை நல்லபடியாக இருந்தால் மட்டுமே நீர்மூழ்கி கப்பல் தேடல் பணிக்கு பயன்படுத்தப்படும்.இதுகுறித்து தேடுதல் தலைமை அதிகாரியான ஹூஸ்டன் கூறுகையில், தேடல் பணியில் நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துவதால் விமானத்தின் பாகங்கள் கிடைத்துவிடும் என்று அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என்றும், அது நடக்காமல் கூட போகலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி