சிட்னி:-பசிபிக் கடலில் பப்புவா நியூகினியாவில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் சடக் பல்கலைக்கழக பேராசிரியர் பிலிப் முன்டே தலைமையிலான குழுவினர் பவளப் பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பருவநிலை மாற்றம் காரணமாக வான் மண்டலம் 30 சதவீதம் கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகிறது. அவற்றை கடல்நீர் உறிஞ்சுவதால் அது நச்சுத்தன்மை பொருந்திய ஆசிட் ஆக மாறி வருகிறது.எனவே, பவளப்பாறைகள் சேதமடைந்து மீன்களும், கடல் வாழ் உயிரினங்களும் அழியும் ஆபத்து உருவாகியுள்ளது.
மேலும், கடல்நீர் அமிலத்தன்மையாக மாறி வருவதால் மீன்களின் எதிரிகள் அவற்றை சுலபமாக மோப்பம் பிடித்து வேட்டையாடி அழித்து வருகின்றன.இதனால், மீன் இனம் மெல்ல அழிந்து வருகிறது. இந்த தகவலை பேராசிரியர் பிலிப் முன்டே தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி