சென்னை:-பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. கமலின் உத்தமவில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்தது பற்றி பார்வதி கூறியதாவது: உத்தமவில்லன் படத்தில் நடிக்க ஸ்கிரின் டெஸ்ட்டுக்கு வரும்படி என்னை அழைத்தனர்.
முதலில் என் புகைப்படங்களை அனுப்பி வைத்தேன். அந்த நேரத்தில் நான் பெங்களூரில் விளம்பர படமொன்றில் நடித்துக் கொண்டிருந்தேன்.போட்டோவை பார்த்துவிட்டு டெஸ்ட் ஷூட் எடுக்க வேண்டும் வரமுடியுமா என்றனர். அங்கு சென்றபோது ஒரு சீனை சொல்லி நடித்துக்காட்ட கேட்டனர். நானும் நடித்தேன்.
உதவி இயக்குனர்கள் அதை வீடியோவில் பதிவு செய்துகொண்டனர். பிறகு அதை டைரக்டர் ரமேஷ் அரவிந்த், கமலிடம் காட்டியபோது இருவருக்கும் என் நடிப்பு பிடித்திருந்தது. இதையடுத்து எனக்கு வாய்ப்பு தரப்பட்டது. இப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி