செய்திகள் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம் வழங்கி தீர்ப்பு!…

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம் வழங்கி தீர்ப்பு!…

திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அங்கீகாரம் வழங்கி தீர்ப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வழிவகுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களின் சமூக மேம்பாட்டிற்காக திட்டங்களை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநங்கைகளுக்கு என பிரத்யேக கழிப்பறைகளும் அவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ உதவிகளும் ஏற்படுத்தி தர மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி