மும்பை:-இந்தி திரைப்படங்களில் நடன காட்சிகளில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஆடி மகிழ்வித்தவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் கடந்த வருடம் மூளை அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து திரும்பினார்.
இந்நிலையில், இவருக்கு ஷின் ஸ்பிளிண்ட்ஸ் என்ற மற்றொரு வியாதி தாக்கியுள்ளது. இந்த வியாதியால் இவரது கால் மூட்டு பகுதியில் இருந்து பாத மூட்டு வரை வலி ஏற்படும். பொதுவாக ஓட்ட பந்தய வீரர்கள் மற்றும் நடனம் ஆடுபவர்களை அதிகம் தாக்கும் இந்த நோய்.
இது குறித்து டுவிட்டர் வலைதளத்தில் தொடர்பு கொண்டுள்ள ஹிருத்திக் ரோஷன், தனது நோய்க்கு யாரேனும் தீர்வு தர இருக்கின்றனரா.என்று கேட்டுள்ளார். எனது வாழ்நாள் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறேன். டுவிட்டரில் இதற்கு பதில் இருக்கும்.அதனை எனக்கு தெரிவியுங்கள் என்று டுவிட்டர் வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி