சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. வருகிற 11ம் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தினை மே 9ல் ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. ஐப்பானிய மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 3 ஆயிரத்து 850 தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகின்றனர். ‘கோச்சடையான்’ படத்தினை ரஜினி மகள் சௌவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சரத்குமார், ஷோபனா, ஆதி, ஜாக்கி ஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி