சென்னை:-அனிருத்,நடிகை ஆன்ட்ரியா ஆகிய இருவருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆன்ட்ரியாவுக்கு உதட்டுடன் உதடு சேர்த்து அனிருத் முத்தம் கொடுக்கும் படங்கள் இணையதளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில், அனிருத்,ஆன்ட்ரியா இருவரும் ‘வடகறி’ என்ற படத்துக்காக ஒரு கவர்ச்சிகரமான பாடலை ஜோடியாக பாடினார்கள். இந்த பாடல் காட்சியில், ஜெய் மற்றும் சன்னி லியோன் நடித்து இருக்கிறார்கள். பாடல் காட்சி, பாங்காக்கில் படமானது.
‘வடகறி’ படத்தில், ஜெய்,சுவாதி ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் காதல் ஜோடியாக நடித்தவர்கள். இந்த இளம் ஜோடியுடன் கஸ்தூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விவேக் சிவா, மெர்லின் சாலமன் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி