அரசியல்,செய்திகள் திருமணத்தை மறைத்தவர் மோடி என ராகுல் விமர்சனம்!…

திருமணத்தை மறைத்தவர் மோடி என ராகுல் விமர்சனம்!…

திருமணத்தை மறைத்தவர் மோடி என ராகுல் விமர்சனம்!… post thumbnail image
புதுடெல்லி:-பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் தான் ஜசோதாபென் என்ற பெண்ணை திருமணம் செய்ததாகவும், அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதுவரை தனக்கு திருமணம் நடந்ததை மறைத்ததாக அவர் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-மோடி எத்தனை முறை தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது தெரியாது. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தன் மனைவி பெயரை குறிப்பிடவில்லை. முதல் முறையாக அவர் தனக்கு திருமணமானதை இப்போது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.குஜராத்தில் 2009-ம் ஆண்டு மோடி அரசின் உத்தரவின்பேரில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டார்.

ஆனால், அதன்பின்னர் டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக பா.ஜனதா கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட மரியாதையைத்தான் அளிக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி