இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடாவில் இன்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-மோடி எத்தனை முறை தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது தெரியாது. இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தன் மனைவி பெயரை குறிப்பிடவில்லை. முதல் முறையாக அவர் தனக்கு திருமணமானதை இப்போது எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.குஜராத்தில் 2009-ம் ஆண்டு மோடி அரசின் உத்தரவின்பேரில் இளம்பெண் ஒருவர் வேவு பார்க்கப்பட்டார்.
ஆனால், அதன்பின்னர் டெல்லியில் பெண்களுக்கு மரியாதை அளிப்பதாக பா.ஜனதா கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டினார்கள். பெண்களுக்கு இப்படிப்பட்ட மரியாதையைத்தான் அளிக்கிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி