சென்னை:-விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவர இருக்கும் கத்தி திரைப்படம் பெரிய பட்ஜெட் என்பதால் ஐங்கரன் இண்டர்நேஷனல் உடன் லைகா மொபைல்ஸூம் இணைந்து தயாரிக்க இருந்தனர்.
இந்நிலையில் லைகா மொபைல்ஸ் நிறுவனர் பல நாடுகளில் வியாபார நோக்கில் தொடர்பு வைத்திருப்பது போல் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடனும் தொடர்பு வைத்திருப்பதால் இப்படத்திற்கான எதிர்ப்பு குரல்கள் எழும்பி வர உள்ளது.இதற்கு முன் விஜய் நடித்திருந்த தலைவா படத்திலும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் பல படிகளை தாண்டி வெளிவந்த அப்படம் வீழ்ச்சியை கண்டிருந்தது.
இத்தருணத்தில் இதுபோன்ற சர்ச்சையில் மாட்டியிருக்கும் இப்படம் இதிலிருந்து மீளுமா என்பது சந்தேகம்.சமீபத்தில் வெளிவந்த இனம் திரைப்படம் தமிழ்ஈழப் பிரச்சனையால் முடக்கப்பட்டு தற்போது திரையரங்கில் ஒடாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது.என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி