படத்துக்கு இசை அமைத்த ஜி.வி.பிரகாஷ் வந்தபோது,உங்களிடம் இயக்குனர் விஜய் இப்பட ஷூட்டிங் முடியும்வரை அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொன்னபோது அதை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறதே என்றனர். பதில் அளித்த பிரகாஷ், ஷூட்டிங் தொடங்கிய ஆரம்பத்தில் அசைவம் சாப்பிட்டது உண்மைதான். ஆனால் என் மனைவி சைந்தவி அசைவமே சாப்பிடுவதில்லை. அதை எண்ணிக்கொண்டு ஷூட்டிங் முடியும் வரை அசைவம் சாப்பிடவில்லை என்றார்.
படத்தில் நடிக்கும் நாசரிடம் அசைவம் சாப்பிடாமல் இருந்த அனுபவம்பற்றி கேட்டபோது,சைவம்தான் சாப்பிட வேண்டும் என்று விஜய் சொன்னது உண்மைதான். ஆனால் நானும், இப்படத்தில் நடிக்கும் எனது மகன் லுத்புதின் பாஷா இருவரும் இயக்குனருக்கு தெரியாமல் ஓட்டலுக்கு சென்று அசைவம் சாப்பிட்டு வந்துவிடுவோம். ஏனென்றால் ஷூட்டிங்கில் அசைவமே சமைக்கவில்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி