சென்னை:-பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி.வி.குமார் தயாரிக்கும் படம் ‘முண்டாசுபட்டி’.குறும்படம் நிகழ்ச்சியான நாளைய இயக்குனரில் பங்குபெற்ற புதுமுக இயக்குனர் டி. ராம் இந்த படத்தினை இயக்குகிறார்.
இந்த படத்தில் விஷ்ணுவும், நந்திதாவும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இன்று இந்த படத்தின் டீஸரை யூடியூபில் வெளியிட்டிருந்தனர் இப்படக்குழுவினர்.இப்படம் 80களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி