சென்னை:-‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படம் ‘கணிதன்‘. இப்படம் அதிக பொருட் செலவில் உருவாகிறது.இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். கேத்ரீன் தெரசா ஹீரோயினாக நடிக்கிறார்.
‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் கேத்ரீன் தான் ஹீரோயின். டி.என்.சந்தோஷ் இப்படத்தை இயக்குகிறார்.டிரம்ஸ் கலைஞர் சிவமணி இசையமைக்கும் இப்படத்துக்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தில் அதர்வாவிற்கு வில்லனாக பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘ஆரண்யகாண்டம்’ படத்திலும், ‘கோச்சடையான்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி