சென்னை:-நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இருவரும் லிப் டு லிப் முத்தம் தரும் காட்சி ரகசியமாக படமாக்கப்பட்டது. லட்சுமி மேனன் தற்போது பிளஸ்1 தேர்வு எழுதியுள்ளார்.
லட்சுமி மேனன் ஹோம்லியாக நடித்து வருகிறார். இதனால் முத்தக் காட்சி படங்களை வெளியிட வேண்டாம் என அவரது தரப்பில் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இணையதளங்களில் இந்த படங்கள் இப்போது திடீரென வெளியிடப்பட்டுள்ளது. இதை விஷாலின் நண்பரும் நடிகருமான விஷ்ணு, பேஸ்புக்கில் வெளியிட்டிருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது.
படம் ரிலீசாவதையொட்டி விளம்பரத்துக்காக இந்த படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கிடையில் இந்த படங்கள் வெளியானதால் லட்சுமி மேனன் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி