சென்னை:-சிவகார்த்திகேயன் நடித்த கேடிபில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய தொடர் வெற்றி படங்களால், மான் கராத்தே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த படத்திற்கு தயாரிப்பாளர் செலவு செய்த பணம் மொத்த பணம் ரூ.15 மட்டுமே.
ஆனால் வரும் 4ம் தேதி இந்த திரைப்படத்தை வெளியிடும் 345 தியேட்டர் உரிமையாளர்கள் கொடுத்திருக்கும் அட்வான்ஸ் பணம் மட்டுமே ரூ.28 கோடியை தாண்டிவிட்டது. மேலும் சாட்டிலைட் உரிமை ரூ.9 கோடிக்கு விஜய் டிவி வாங்கியுள்ளது.
அதுபோக வெளிநாட்டு உரிமை ரூ.5 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இவையெல்லாம் சேர்த்து பார்த்தால் ரூ.42கோடி இப்பொழுதே வசூல் செய்துவிட்டது மான் கராத்தே.சிவகார்த்திகேயனின் குறுகிய கால வளர்ச்சியை பார்த்து பெரியநடிகர்களே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி