சென்னை:-ஏப்ரல் 14ம் தேதி விஜய் நடிக்கும் ‘கத்தி’, ஷங்கர் படைப்பில் உருவாகும் ‘ஐ’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ திரைப்படங்களின் ஃபஸ்ட் லுக் வெளிவர உள்ளது.ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும சமந்தா நடிப்பில் உருவாகும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிரூத்.
கோடையில் வெளியிட திட்டமிட்டிருக்கும் ஷங்கரின் படைப்பான ‘ஐ’ திரைப்படம் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளது.இதில் விக்ரம், எமிஜாக்சன் மற்றும் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
லிங்குசாமி இயக்கி சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்கும் தமிழ் புத்தாண்டு நாளில் வெளிவர உள்ளது.இது மட்டுமின்றி அஜித்தின் 55 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் தமிழ்புத்தாண்டு நாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி