சிலி:-தென் அமெரிக்க நாடான சிலியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
உள்ளூர் நேரப்படி 8.45 மணிக்கும் (இந்திய நேரப்படி காலை 5.15 மணிக்கு) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தென் அமெரிக்க நாடுகளின் கடற்கரையை சுனாமி தாக்கியது.இதை தொடர்ந்து கடற்கரையோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிலி அருகே உள்ள பெரு மற்றும் எக்குவாடார் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி