சென்னை:-பிரபல ஆஸ்திரேலியா ஒளிப்பதிவாளர் டேன் மேக் ஆர்தர் தனது வலைதளத்தில் ‘பேரு என்னடா’ படத்தில் பிஸியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் சிம்புவுடன் தென்னிந்தியா முழுவதும் படப்பிடிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சிம்பு படத்திற்கு இதுதான் பெயரா? முதலில் இந்த படத்திற்கு ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் தற்போது ‘பேரு என்னடா’ என்ற பெயரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
பேரு என்னடா? படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாம். இந்த படத்தில் பல கெட்டப்பில் சிம்பு நடிக்கிறார்.பல்லவி சுபாஷ் நாயகியாக நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி