சினிமாவில் அறிமுகமானால் தன்னோடு ஒப்பிட்டு தன் மகளை பார்ப்பார்கள். தேவையில்லாமல் அவளுக்கு தாழ்வு மனப்பாண்மை வரலாம் என்பதால் சினிமாவில் நடிக்க வைக்க மிகவும் தயங்கினார் ஸ்ரீதேவி. ஆனால் இப்போது ஜான்வி ஆள் நிறையவே மாறி இருக்கிறார். தாய்க்கு இணையான அழகை அவர் பெற்று வருவதாக இந்தி மீடியாக்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுத மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தும் எண்ணத்துக்கு வந்திருக்கிறார் ஸ்ரீதேவி.பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் மும்பையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டுக்கு சென்று ஜான்விக்கு ஏற்ற கதை ஒன்றை சொல்லி வந்திருக்கிறார். தன் குடும்பத்தினருடன் கலந்து பேசி முடிவை சொல்வதாக ஸ்ரீதேவி கூறிவிட்டார்.
இதற்கிடையில் தெலுங்கில் ராம்சரண் மற்றும் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகவும் நடிக்க கேட்டு வருகிறார்கள். தற்போது டிகிரி படித்து வரும் ஜான்வி, நடனம், நடிப்பு பயிற்சியும் பெற்று வருகிறார்.இதுபற்றி ஸ்ரீதேவி கூறும்போது “முதலில் படிப்பு முக்கியம். நடிப்பது அவர் விருப்பம். படிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். சினிமாவில் அவள் நடித்தாலும் படித்து முடித்த பிறகுதான்” என்று ஸ்ரீதேவி கூறியிருக்கிறார். ஜான்வியின் படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி