கேரளா:-தளபதி, சிவா போன்ற படங்களில் நடித்த ஷோபனா, நடிப்பதை குறைத்துக்கொண்டு மேடையில் நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். 40 வயதை கடந்த ஷோபனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு கோச்சடையான் படத்தில் அப்பா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் பாவாடா என்ற படத்தில் பிருத்விராஜ் ஜோடியாக ஷோபனா நடிப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது. இதுபற்றி அப்பட இயக்குனர் ஜி.மார்தாண்டனிடம் கேட்டபோது கோபமாக பதில் அளித்தார்.அவர் கூறும்போது,ஷோபனா இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார். ஆனால் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்கிறார் என்பதில் உண்மை இல்லை.
படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவே ஷோபனா ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படி பதில் சொன்ன பிறகும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே பிருத்வி ஜோடியாக ஷோபனா நடிப்பதாக சிலர் தவறாக தகவல் பரப்பி வருகின்றனர். இதை அறிந்தால் பிருத்வியின் மனம் என்ன பாடுபடும் என யாராவது உணர்ந்தார்களா? என கோபப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி