செய்திகள்,திரையுலகம் ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் டிரைலர்!…

‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் டிரைலர்!…

‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் டிரைலர்!… post thumbnail image
சென்னை:-ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் கிருஷ்ணா, ஓவியா, ரூபா மஞ்சரி, கருணா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘யாமிருக்க பயமே’.இப்படம் முழுக்க முழுக்க நைனிடாலில் படமாக்கப்பட்ட திகில் படமாம்.இந்த படத்தின் டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

தனது பாழடைந்த பங்களாவை ஹோட்டல் லாட்ஜாக மாற்றி பிசினஸ் செய்ய விரும்பும் கிருஷ்ணாவுக்கு உதவ, அவரின் காதலி ஓவியா, நண்பர் கருணா, ரூபா மஞ்சரி ஆகியோர் அதே ஹோட்டலில் பணிபுரிகிறார்கள்.அந்த ஓட்டலுக்கு முதன் முதலாக ஒரு ஜோடி வந்து தங்குகின்றனர்.

ஆனால் அவர்கள் வந்ததில் இருந்து துர்சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. இதனால் பயமுற்று அனைவருக்கும் திகில் கிளம்புகிறது. அந்த ஹோட்டலில் என்ன இருக்கிறது, எதனால் துர்சம்பவங்கள் நடக்கின்றன என்பது கதை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி