சென்னை:-நேற்று முன்தினம் நடிகை மனோரமாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விடவும் திணறினார். இதையடுத்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். செயற்கை சுவாசமும் பொறுத்தப்பட்டது.
உடல் நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். மாலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே அவர் வைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து சில நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே அவர் இருப்பார் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி