தமிழில் அவருக்கு படத்துக்கு ஒரு கோடி கொடுக்கும் நிலையில், தெலுங்கில் ஒரு படத்துக்கே 2 கோடி கொடுக்கிறார்கள்.அதனால்தான் இப்படி தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் நயன். இதனால் நண்பேன்டா படத்திலிருந்து விலக அவர் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது.
ஆனால், இந்த செய்தியை உதயநிதி மறுத்துள்ளார். நயன்தாரா தெலுங்கு படங்களில் பிசியாக இருந்தாலும், அவர் கால்சீட் தரும் வரை காத்திருந்து படப்பிடிப்பு நடத்த தயாராக உள்ளோம். ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், அடுத்து நயன்தாரா வரும்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும். நண்பேன்டா படத்தைப்பொறுத்தவரை நயன்தாராதான் கதாநாயகி. அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி