அவருடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி, நாசர், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்தி நடிகர் ஷாரூக்கான் வந்து ஆடியோவை வெளியிட்டு சென்றார். கோச்சடையான் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. டிரெய்லரும் வெளியாகி லட்சக் கணக்கானோர் இணைய தளங்களில் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் இந்த டிரைலர் வெளியீட்டு விழா, மும்பையில் உள்ள சினிமேக்ஸ் வளாகத்தில் நடந்தது. இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டு இந்தி கோச்சடையான் டிரைலரை வெளியிட்டு ரஜினியை புகழ்ந்து பேசினார். முன்னதாக விழாவின் போது அமிதாப் காலில், ரஜினிகாந்த் விழுந்து ஆசி பெற்றார்.விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கெர், நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன், நடிகை கஜோல், லதா ரஜினிகாந்த், இயக்குநர் செளந்தர்யா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி