சென்னை:-கவுதம் மேனன் படத்தில் நடிக்க இருக்கும் அஜீத்தின் கெட்டப் எப்படி இருக்கும் என இணையதளங்கள் பலவாறு செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்த அவருடைய ஆஸ்தான மேக்கப்மேன் ஷக்தியின் திருமணத்தில் ஷாலினியுடன் கலந்து கொண்ட அஜீத்தின் ஹேர் ஸ்டைலை பார்த்த பலர், இதுதான் அஜீத்தின் அடுத்த படத்தின் ஹேர் ஸ்டைலாக இருக்கும் என பேச ஆரம்பித்துவிட்டனர்.
மங்காத்தா படத்திற்கு பின்னர் வந்த அனைத்து படங்களிலும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தலைகாட்டிக்கொண்டிருக்கும் ‘தல’, கவுதம் மேனன் படத்தில் புதிய கெட்டப்பில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜிம்மிற்கு சென்று சிக்ஸ்பாக் உடலமைப்பாக மாறியிருக்கும் அஜீத், புதுமையான ஹேர்ஸ்டைலில் தோன்றுவார் என்று கவுதம் மேனனும் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருமண விழாவில் அஜீத் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தோன்றியிருப்பதால் இந்த கெட்டப்பில்தான் அஜீத் படத்திலும் தோன்றுவார் என இணையதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி