சென்னை:-பழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா, சில வருடங்களுக்கு முன் மூட்டு வலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நிலை குன்றியது. கடந்த ஆண்டும், சில மாதங்களுக்கு முன்பும் அவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெற்றார்.
சில நாட்களுக்கு முன் மனோரமா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘பேராண்டி’ படத்துக்காக ஒரு பாடலை சொந்தக் குரலில் பாடினார். சென்னையில் நடந்த இதன் ஒலிப்பதிவில் உற்சாகமாகப் பங்கேற்று வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் அவருக்கு திடீரென்று சளி அதிகரித்தது. அதை தொடர்ந்து மூச்சு திணறலும் ஏற்பட்டது. உடனே அவரை கிரீம்ஸ் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு மனோரமா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி