செய்திகள்,திரையுலகம் ‘கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டார் அமிதாப் பச்சன்!…

‘கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டார் அமிதாப் பச்சன்!…

‘கோச்சடையான்’ இந்தி டிரெய்லரை வெளியிட்டார் அமிதாப் பச்சன்!… post thumbnail image
மும்பை:-சுமார் 125 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ‘கோச்சடையான்‘ படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார்.இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள்.

‘கோச்சடையான்’ படப் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. டிரெய்லரும் வெளியாகி லட்சக்கணக்கானோர் இணைய தளங்களில் பார்த்துள்ளனர்.தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட ‘கோச்சடையான்’ ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை வெளியிடுகின்றனர்.படத்தினை ரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘கோச்சடையான்’ படத்தின் இந்தி டிரெய்லரை பாலிவுட் ‘சூப்பர் ஸ்டார்’ அமிதாப் பச்சன் நேற்று வெளியிட்டார்.மும்பை ‘சினிமேக்ஸ்’ வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அனுபம் கெர், அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன், நடிகை கஜோல், லதா ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி