செய்திகள்,திரையுலகம் கார் விபத்தில் கன்னட நடிகர் மரணம்!…

கார் விபத்தில் கன்னட நடிகர் மரணம்!…

கார் விபத்தில் கன்னட நடிகர் மரணம்!… post thumbnail image
நகரி:-பிரபல கன்னட நடிகர் அந்தன்குமார். இவர் கதாநாயகனாக நடித்த லவ் ஜங்சன் படம் சமீபத்தில் வெளியானது. இவர் தற்போது பக்த தவ்லி என்ற படத்தில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு பாதியில் உள்ளது.

அந்தன்குமார் தனது மனைவி சிந்து, 2 வயது மகன் மோகித் மற்றும் தாயார், தங்கையுடன் கர்நாடகா மாநிலம் கங்காபதி என்ற இடத்தில் இருந்து காரில் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் நேற்று மாலை வீடு திரும்பினார்.

ஸ்ரீசைலம் மலைப்பாதையில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. அதில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.நடிகர் அந்தன்குமார் பலத்த காயத்துடன் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி