இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. ‘டாப்–ஆர்டர்’ வீரர்களான ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராத் கோஹ்லி நல்ல ‘பார்மில்’ உள்ளனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் அடித்த ரோகித், கோஹ்லி இன்றும் அசத்தலாம். யுவராஜ் சிங்கின் ‘பார்ம்’ கவலை அளிக்கிறது. ‘மிடில்–ஆர்டரில்’ வரும் சுரேஷ் ரெய்னாவை, 4வது வீரராக களமிறக்கினால், கூடுதலாக ரன் சேர்ப்பார்.
கேப்டன் தோனிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றம். ரவிந்திர ஜடேஜா, அஷ்வின் கைகொடுக்கும் பட்சத்தில் வலுவான இலக்கை பதிவு செய்யலாம்.வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி சிறப்பாக செயல்படுகின்றனர். ‘சுழலில்’ அமித் மிஸ்ரா அசத்தி வருகிறார். முதலிரண்டு போட்டியில், ‘ஆட்டநாயகன்’ விருது வென்ற இவர், இன்றும் விக்கெட் வேட்டை நடத்தலாம். கட்டாய வெற்றி:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோல்வி கண்ட வங்கதேச அணி, அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. சொந்த மண்ணில் விளையாடும் வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோல்வி அடைந்தது பின்னடைவு.தமிம் இக்பால், அனாமுல் ஹக் ஜோடி சிறந்த துவக்கம் கொடுக்க வேண்டும். மோமினுல் ஹக், சாகிப் அல் ஹசன், கேப்டன் முஷ்பிகுர் ரஹிம், மகமதுல்லா உள்ளிட்டோர் எழுச்சி கண்டால் நல்ல ஸ்கோரை பெறலாம். வேகப்பந்துவீச்சில் அல்–அமின் ஹொசைன் ஆறுதல் தருகிறார்.‘ஹாட்ரிக்’ வெற்றியை நோக்கி இந்தியாவும், கட்டாய வெற்றியை நோக்கி வங்கதேசமும் விளையாட இருப்பதால், இன்றைய போட்டியின் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.இதுவரை இவ்விரு அணிகள் சர்வதேச ‘டுவென்டி–20’ மற்றும் உலக கோப்பை (டுவென்டி–20) அரங்கில் இந்தியா–வங்கதேசம் அணிகள் ஒரே ஒரு முறை மட்டும் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி