2003ல் வெளிவந்த ‘புன்னகை தேசம்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் மதி. தொடர்ந்து “வெயில், நேபாளி, சிலம்பாட்டம், பையா, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, என்றென்றும் புன்னகை’ உட்பட பல தமிழ்ப் படங்களுக்கும், ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சைத்தான் படத்திற்கும், தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘மிர்ச்சி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தவர்.
“மௌனம் பேசியதே, காக்க காக்க, மன்மதன், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, 7ம் அறிவு, பாண்டிய நாடு உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு கலை இயக்குனராகப் பணியாற்றியவர் ராஜீவன். தற்போது தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் பரபரப்பாய் இயங்கி வருகிறார்.
சுசீந்திரன், மதி, ராஜீவன் மூவரும் இணைந்து “நான் மகான் அல்ல, பாண்டிய நாடு” படங்களில் பணி புரிந்திருக்கிறார்கள். இந்த படங்களில் இணைந்து பணியாற்றியதன் மூலம் இவர்களுக்கிடையே நல்ல நட்பு உருவானது. இப்போது அந்த நட்பு அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது.
சினிமா மீது தீராத காதல் கொண்ட இவர்களது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி