அதில் அவர் மூட நம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் நடித்து இருக்கிறார். பேய்–பிசாசு போன்றவை இருப்பதாக நம்பும் வகையில் அந்த விளம்பரம் அமைந்துள்ளது. இது பொய்யான, மூட நம்பிக்கைகளை ஊக்குவிப்பது ஆகும்.இதுதொடர்பாக நான் பாந்திரா போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்து விட்டனர். இதனால் கோர்ட்டை நாடி உள்ளேன்.
அமிதாப்பச்சன் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது மராட்டிய மூட நம்பிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.இந்த மனு நேற்று நீதிபதி சீதா குல்கர்னி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏப்ரல் 8–ந்தேதி விசாரிப்பதாக கூறி வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி