மீரட்:-உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடிகை நக்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில், அவர் அந்த பகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தை முடித்து விட்டு காரில் ஏறிச் சென்றார். அப்போது நக்மாவை சுற்றி தொண்டர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.
அப்போது இளைஞர் ஒருவர் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நக்மா, நக்மா, தனது அருகே நின்றிருந்த அந்த இளைஞரை அறைந்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார்.
இதனிடையே நக்மாவிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை என மீரட் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றால் மீரட்டிற்கு வரமாட்டேன் என்று நடிகை நக்மா தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி