செய்திகள்,திரையுலகம் ரஜினிக்காக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த நடிகை!…

ரஜினிக்காக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த நடிகை!…

ரஜினிக்காக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த நடிகை!… post thumbnail image
சென்னை:-பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது குறித்து அவர் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், பட இயக்குனருமான சவுந்தர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகாவை அணுகியபோது, கதையம்சம், திரைக்கதை அல்லது தீபிகாவின் கதாபாத்திரம் ஆகிய எதனையும் கேட்காமல் உடனே நடிக்க ஒப்பு கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒன்றாக நடிப்பது என்பது தனக்கு மிக பெரிய கவுரவம் என்று கருதியதாலேயே தீபிகா நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளார். அவருடன் பேசுவதற்கும், அவருடன் சினிமா குறித்து விவாதிப்பதற்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே தீபிகா படுகோனே உணர்ந்துள்ளார்.

நடிகை தீபிகாவின் நடிப்பினாலேயே படம் தீர்மானிக்கப்படும் என்று பட குழுவினர் உணர்ந்துள்ளதாக தீபிகாவின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. கோச்சடையான் படம் நாட்டின் முதல் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள படம்.இந்த படத்தை இயக்கியுள்ளதன் வாயிலாக தனது முதல் இயக்குநர் பணியை சவுந்தர்யா தொடங்கியுள்ளார். நடிகர்கள் ஜாக்கி ஷெராப் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள கோச்சடையான் படம் வருகிற ஏப்ரல் 11ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி