நடிகர் ரஜினிகாந்த் உடன் ஒன்றாக நடிப்பது என்பது தனக்கு மிக பெரிய கவுரவம் என்று கருதியதாலேயே தீபிகா நடிப்பதற்கு ஒப்பு கொண்டுள்ளார். அவருடன் பேசுவதற்கும், அவருடன் சினிமா குறித்து விவாதிப்பதற்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே தீபிகா படுகோனே உணர்ந்துள்ளார்.
நடிகை தீபிகாவின் நடிப்பினாலேயே படம் தீர்மானிக்கப்படும் என்று பட குழுவினர் உணர்ந்துள்ளதாக தீபிகாவின் நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது. கோச்சடையான் படம் நாட்டின் முதல் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள படம்.இந்த படத்தை இயக்கியுள்ளதன் வாயிலாக தனது முதல் இயக்குநர் பணியை சவுந்தர்யா தொடங்கியுள்ளார். நடிகர்கள் ஜாக்கி ஷெராப் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள கோச்சடையான் படம் வருகிற ஏப்ரல் 11ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி