செய்திகள்,திரையுலகம் பிஸியாக இருக்கிறார் நடிகர் ஆர்யா!…

பிஸியாக இருக்கிறார் நடிகர் ஆர்யா!…

பிஸியாக இருக்கிறார் நடிகர் ஆர்யா!… post thumbnail image
சென்னை:-அட்லீ இயக்கத்தில் ‘ராஜா ராணி’ ஹிட்டுக்குப் பிறகு, ஆர்யா நடித்துக்கொண்டிருக்கும் படம் மீகாமன்.’முன்தினம் பார்த்தேனே’, “தடையறத் தாக்க’ போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இப்படத்தினை இயக்குகிறார். படத்திற்கு இசையமைக்கிறார் தமன்.

‘மீகாமன்’ படத்தில் நடித்துக்கொண்டே எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ‘புறம்போக்கு‘ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் ஆர்யாவுடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு ராஜேஷ்.எம், ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்த்தன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் யாருடன் முதலில் இணைவார் என ‘மீகாமன்”, புறம்போக்கு ஆகிய படங்கள் முடிந்த பிறகு தான் தெரியவரும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி