செய்திகள்,திரையுலகம் சமுத்திரக்கனியுடன் இணையும் விமல்!…

சமுத்திரக்கனியுடன் இணையும் விமல்!…

சமுத்திரக்கனியுடன் இணையும் விமல்!… post thumbnail image
சென்னை:-‘நிமிர்ந்து நில்‘ படத்திற்குப் பிறகு விமலுடன் கைகேர்த்திருக்கிறார் சமுத்திரக்கனி. ‘நீ எல்லாம் நல்லா வருவடா‘ எனும் படத்தில் விமலுடன் இணைந்து நடிக்கிறார் சமுத்திரக்கனி.அமிர்தா எனும் புதுமுகம் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி , ‘கும்கி’ அஸ்வின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை சீமான், சுசிகணேசன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த நாகேந்திரன் இயக்குகிறார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுத ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.’புன்னகைப் பூ’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ போன்ற படங்களைத் தயாரித்த கீதா இப்படத்தையும் தயாரிக்கிறார்.

ஓர் உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பாண்டிச்சேரியில் ஆரம்பித்துவிட்டது.படத்தின் மற்ற காட்சிகளுக்காக சென்னை, ஊட்டி, கேரளா, ஆஸ்ரேலியா, மற்றும் மலேசியா செல்கிறது படக்குழு.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி