செய்திகள்,திரையுலகம் ஏப்ரல் 4ம் தேதி ‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியீடு!…

ஏப்ரல் 4ம் தேதி ‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியீடு!…

ஏப்ரல் 4ம் தேதி ‘மான் கராத்தே’ திரைப்படம் வெளியீடு!… post thumbnail image
சென்னை:-சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ், சூரி ஆகியோர் நடித்து வெளிவரத் தயாராக இருக்கும் படம் ‘மான் கராத்தே’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய திருக்குமரன் இயக்கியிருக்கிறார்.

படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். படத்தினை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். இப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா சமீபத்தில் நடந்தது. பாடல்களும் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் இம்மாத இறுதியில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

ஆனால், தற்போது இப்படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சிவகார்த்திகேயனின் இப்படத்தையும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி