சென்னை:-‘அட்டக்கத்தி’ படத்தில் ‘ஆடி போனா ஆவணி’ பாடல் மூலம் அறிமுகமானவர் ‘கானா’ பாலா. குறுகிய காலத்திலேயே தனது குரல் மூலம் மக்களைக் கவர்ந்தவர்.சினிமா நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களில் “என்னை ஹீரோவாகப் போட்டு யாராவது படம் எடுங்களேன்” என தமாஷாக கூறுவார். ஆனால், இப்போது நிஜமாகவே ஹீரோ ஆகிவிட்டார்.
‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஹலோ’, ‘பிரியமானவளே’, சுந்தர்.சி நடித்த ‘முரட்டுக்காளை’ ரீமேக் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய செல்வபாரதி அடுத்து இயக்கப்போகும் படம் ‘பாரீஸ் கார்னர்‘. இந்தப் படம் மூலம் ஹீரோவாகிறார் ‘கானா’ பாலா.
சென்னையில் வறுமையில் வாழும் மக்களைப் பற்றி பேசப் போகிறது ‘பாரீஸ் கார்னர்’. இதில் பாரீஸ் கார்னரில் ரிக்ஷா ஓட்டுபவராக நடிக்கயிருக்கிறார் ‘கானா’ பாலா. அத்துடன் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தையும் அவரே பாடவிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி