ஒருநாள் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக ரோட்டில் மயங்கி விழுகிறார். இதனைப் பார்க்கும் முருகன் படிப்பை பாதியில் விட்டு மீன்பிடி தொழிலை செய்ய முடிவு செய்கிறார். முதலில் மறுக்கும் தாயார் பிறகு சம்மதிக்கிறார். இதுவரை கடலுக்கு செல்லாத முருகன், சிலர் உதவியால் மின்பிடிக்க கற்றுக் கொள்கிறார். பிறகு சொந்தமாக படகு வாங்கி மீன் பிடித்தல் தொழிலை செய்கிறார். இவருடன் சுகுமாரும் இணைந்து தொழிலை செய்து வருகிறார்கள்.கடலில் மூன்று நாட்கள் தங்கினால் மீன் அதிகமாக கிடைக்கும் என்ற நோக்கத்தில், ஒருநாள் இருவரும் இணைந்து கடலுக்குள் வெகுதூரம் செல்கிறார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக இரண்டு பேரும் சூறாவளியில் சிக்கிக் கொள்ள நேருகிறது.இறுதியில் இருவரும் சூறாவளியில் இருந்து மீண்டார்களா? மாண்டார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகன் முருகன், தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். படத்தில் இரண்டு கதாநாயகிகள், ஆனால் இருவருக்கு வாய்ப்புகள் குறைவு. காதல் சுகுமார், உடுமலை ரவி ஆகிய இருவரும் காமெடி என்னும் பெயரில் கடிக்கிறார்கள்.கடலில் மீன் பிடி தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்க்கை பிரச்சினை என்ற நல்ல கதையை களமாக எடுத்துக் கொண்ட இயக்குனர் அதை திரைக்கதையில் கோட்டை விட்டுவிடுகிறார். முற்பகுதியில் காட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தாலும் பிற்பகுதியில் தேவையற்ற காட்சிகள், லாஜிக் இல்லாத காட்சிகள் என படத்தின் நீளத்தை கூட்டியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தானே இப்படத்தை தயாரித்த முருகன், நடிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.அன்பரசு இசையில் இரண்டு பாடல்களை ரசிக்கலாம். பாலாஜி ஒளிப்பதிவில் கடலை அழகாக காட்ட முயற்சி செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘வங்கக்கரை’ பரவாயில்லை….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி