செய்திகள் முதல் முறையாக பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய ‘எய்ட்ஸ்’!…

முதல் முறையாக பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய ‘எய்ட்ஸ்’!…

முதல் முறையாக பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய ‘எய்ட்ஸ்’!… post thumbnail image
வாஷிங்டன்:-பலருடன் ‘செக்ஸ்’ உறவு கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெண்ணுடன் செக்ஸ் உறவு கொள்ளும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவுவதில்லை.ஆனால் அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் பெண்ணுடன் செக்ஸ் உறவு கொண்ட மற்றொரு பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளது. இது அங்குள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் முன் எச்சரிக்கை மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எய்ட்ஸ் நோய் பாதித்த பெண்ணுக்கு திடீரென தொண்டை வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம், வீக்கத்துடன் கூடிய வேதனை, வறட்டு இருமல், தொடர்ந்து வயிற்றோட்டம், தசை வீக்கம் போன்றவை ஏற்பட்டது.இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டார். இவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டபோது இவரை எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி., வைரஸ் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் தனது பெண் நண்பருடன் மட்டுமே ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்தார். ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் அவருக்கு எப்படி எய்ட்ஸ் நோய் தாக்கியது என டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.பொதுவாக ஆண்களுடன் செக்ஸ் உறவு, பச்சை குத்தல், அக்கு பஞ்சர், ஒருவர் உடலில் இருந்து திரவம் மற்றொருவர் உடலுக்குள் செல்வது அல்லது ரத்தம் செலுத்துதல் அல்லது பெறுதல் மூலமே எய்ட்ஸ் பரவ வாய்ப்பு உள்ளது.அந்த விதத்தில் ஏதாவது ஒரு வகையில் இவருக்கு எய்ட்ஸ் பரவி இருக்கலாம் என டாக்டர்கள் கருதுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி